இந்தியா-ரஷ்யா இடையிலான ஒப்பந்தங்களை செயல்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் தொலைபேசியில் உரையாடினர்.
இந்தியா-ரஷ்யா இடையிலான 21-வது உச்சி மாநாடு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் பங்கேற்று உரையாடினர். அப்போது இரு நாடுகள் இடையேயான நல்லுறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலும் செய்யப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்துவது குறித்து, இருவரும் ஆலோசனை செய்ததாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.