மத்திய அரசாங்கத்தின் புதிய முயற்சி!

இந்தியாவில் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க இந்திய அரசாங்கம் புதிதாக 162 பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் ( Pressure Swing Adsorption Oxygen plants) தொடங்கும் திட்டம் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.…

இந்தியாவில் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க இந்திய அரசாங்கம் புதிதாக 162 பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் ( Pressure Swing Adsorption Oxygen plants) தொடங்கும் திட்டம் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய இந்திய அரசாங்கம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பொது சுகாதார மையங்களில் நிறுவ மொத்தம் 162 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகளை அரசு தொடங்கியுள்ளதாக மத்திய அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

மேலும் இதுகுறித்து மத்திய அமைச்சகம் தனது ட்விட்டர் பகுதியில், “இதுவரை நாட்டில் தலா 33 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.

அதில் மத்தியபிரதேசத்தில் 5 ஆலைகளும், சண்டிகர், குஜராத் மற்றும் உத்தரகாண்டில் 3 ஆலைகளும், பீகார், கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் 2 ஆலைகளும் மற்றும் ஆந்திரபிரதேசம், சத்தீஸ்கர், புதுடெல்லி, ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, பஞ்சாப், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் தலா 1 ஆலையும் நிறுவப்பட்டுள்ளது” என்று பதிவிட்டிருந்தது. மேலும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் 59 ஆக்சிஜன் ஆலைகளும் மே மாதம் இறுதிக்குள் 80 ஆலைகளும் நிறுவப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.