தினசரி உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு: இன்று 15 ஆயிரத்தை நெருங்கியது!

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 14,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு…


தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 14,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று கூடுதலாக திரையரங்குகள், சலூன் கடைகள் மூடல், அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபட அனுமதியில்லை உள்பட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று ஒரே நாளில் 14,842 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 10,66,329 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,00,668 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனாவுக்கு 80 பேர் உயிரிழந்தனர், ஒட்டுமொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 13,475 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 9,142 மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,52,186 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டங்களைப் பொறுத்தவரை சென்னையில் இன்று 4,086 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. செங்கல்பட்டில் 1163, கோவையில் 1,004 என வெளி மாவட்டங்களில் ஆயிரத்தை கடந்து பதிவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.