சிகரத்தைத் தொட்ட கொரோனா!

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களில் ஒருவருக்கு முதல் முறையாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது மலையேறுபவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நார்வே நாட்டைச் சேர்ந்த மலை ஏறும் வீர்ர் எர்லெண்ட் நெஸ். இவர் தனது…

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களில் ஒருவருக்கு முதல் முறையாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது மலையேறுபவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நார்வே நாட்டைச் சேர்ந்த மலை ஏறும் வீர்ர் எர்லெண்ட் நெஸ். இவர் தனது குழுவினருடன் எவரெஸ் சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் நடத்தப்பட்ட பரிசோதனையில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி கொரோனா நோய்த்தொற்று அவருக்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்டு அவர் நேபாலிலுள்ள காத்மாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.


இதையடுத்து அவருடன் சென்ற மலை ஏறுபவர்கள், வழிகாட்டிகள் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் எவரெஸ்ட் சிகர அடிவாரத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து மலையேறுதல் துறையின் இயக்குநர் மீரா அச்சாரியா கூறியதாவது, “இதுவரை எங்களுக்கு நிமோனியா மற்றும் மலை நோயால் பாதிக்கப்பட்டோரின் ஆவணங்களைத் தவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஆவணங்கள் வரவில்லை” என்று தெரிவித்தார்.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த 2019ம் ஆண்டின் மே மாதம் மலையேறுதல் நிறுத்திவைக்கப்பட்டுருந்த நிலையில், இந்தாண்டுதான் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால், அதற்குள் ஏற்பட்ட இச்சம்பவத்தால் மலையேறுபவர்கள் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.