முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் தீ விபத்துகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்

சென்னையில் பட்டாசு விபத்துகளை எதிர்கொள்ளும் வகையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பட்டாசு விபத்து கடந்த ஆண்டில் குறைந்துள்ளது. விபத்து குறித்த விழிப்புணர்வே இதற்கு காரணம். சென்னையில் 11 பேர் கடந்த ஆண்டு பட்டாசு விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

விபத்தினை எதிர்கொள்ள சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 படுக்கைகள் கொண்ட பிரத்யேக பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தீக்காயங்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படும்.

அதே போல தரை தளத்தில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவு அதிதீவிர சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது போலவே மாநிலம் முழுவதும் சிறப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி குறித்து மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 13 வாகனங்களில் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இப்பணியை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரும் சனிக்கிழமை (நவ.6) 8வது மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் 50,000 இடங்களில் நடைபெறுகிறது.” என கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

கொதிகலன் வெடிப்பில் தொழிலாளிகள் உயிரிழப்பு!

’இந்தியன் 2’ விவகாரம்: இயக்குநர் ஷங்கருடன் லைகா சமரச பேச்சு

Saravana Kumar

“ஜெய் பீம்” விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை; நடிகர் சூரி

Halley karthi