முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கன் மருத்துவமனையில் நடந்த தாக்குதல்: ஐஎஸ்-கே அமைப்பு பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பின் கோராசன் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவ படைகள் முழுமையாக வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு இப்போது வன்முறை சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தலைநகர் காபூலில் உள்ள சர்தார் முகமது தாவுத் கான் ராணுவ மருத்துவ மனையில் நேற்று தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பொதுமக்கள் மீதும் பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இந்த அசம்பாவித சம்பவங்களில் 3 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் படுகாயமடைந் தனர். இந்நிலையில் உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தாக்குதலை நடத்தியது ஐஎஸ் அமைப்பில் கோராசான் ( ISIS-K) அமைப்பை சேர்ந்தவர்கள்தான் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சக துணை செய்தி தொடர்பாளர், பிலால் கரிமி உறுதிப்படுத்தியுள்ளார். அந்த அமைப்பை சேர்ந்த 5 பேர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர் என்றும் தலிபான் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். ஒருவர் படுகாயங்களுடன் கைது செய்யப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.முன்னதாக இது தற்கொலை தாக்குதல் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இந்த தாக்குதலில் அந்நாட்டின் மூத்த ராணுவ தளபதி ஹமத்துல்லா மோக்லிஸ் கொல்லப்பட்டுள்ள தகவல், இப்போது வெளியாகியுள்ளது.

‘துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் எங்களை பாதுகாப்பான அறைகளுக்கு செல்லச் சொன் னார்கள். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொரு அறையாக சென்று தாக்குதலை நடத்தினார்கள்’ என்று தெரிவித்துள்ளார், சம்பவத்தின் போது மருத்துவமனைக்குள் இருந்த மருத்துவர் ஒருவர். இந்த மருத்துவமனையில் கடந்த 2017 ஆம் ஆண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது 30 பேர் கொல்லப்பட்டனர்.

Advertisement:
SHARE

Related posts

olympics; துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு – இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தது இந்திய அணி

Saravana Kumar

“பாஜக வழக்கு தொடுத்திருப்பது மாநில சுயாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்” – E.R. ஈஸ்வரன் எம்.எல்.ஏ

Jeba Arul Robinson

ஜெயலலிதா பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை : அமைச்சர் அறிவிப்பு

Halley karthi