முக்கியச் செய்திகள் இந்தியா

‘உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்’- நடிகை ஊர்வசி ரவுடேலா ட்வீட்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நடிகை ஊர்வசி ரவுடேலா உங்களுக்காகவும், உங்கள் குடும்பமும் நலம் பெற நான் பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் நேற்று காலை
உத்தராகண்ட் மாநிலத்திலிருந்து டெல்லிக்கு தனது சொகுசு காரில் (BMW GT) வந்து கொண்டிருந்தபோது உத்தரகண்ட் – அரியானா மாநில தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி, சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி பயங்கர விபத்திற்கு உள்ளானதில் கார் தீப்பற்றி எரிந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் உடனடியாக சுதாரித்துக் கொண்டு கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார். பின்னர் உடனடியாக மீட்கப்பட்ட அவர் முதல்கட்ட சிகிச்சைக்காக ரூர்க்கி மாவட்டத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதுகிலும் தோள்பட்டைலும் காயமடைந்து இருப்பதாகவும், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளாகி உள்ள நிலையில் நடிகை ஊர்வசி ரவுடேலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், உங்களுக்காகவும், உங்கள் குடும்பமும் நலம் பெற நான் பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதில், நடிகை ஊர்வசி ரிஷப் பண்ட்டின் பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஊர்வசி ரவுடேலா ரிஷப் பண்டை காதலிப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கனமழையால் வெள்ளக் காடான பெங்களூர்-மீட்புப் பணியில் மாநகராட்சி நிர்வாகம்

Web Editor

கூலித் தொழிலாளர்களுக்கு 50% மானியத்தில் கடன் வழங்கல் – தமாகா தேர்தல் அறிக்கை

Gayathri Venkatesan

கர்நாடகத்தில் சாலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

Web Editor