36.1 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

கோவிட் விவகாரத்தில் WHO அமெரிக்காவிற்கு பாராட்டு ! சீனாவிற்கு குட்டு

கோவிட் விவகாரத்தில் சீனா இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாக சொல்வதுடன், சரியான தரவுகளையும் வெளியிடாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அமெரிக்காவின் கோவிட் எண்ணிக்கை விவரங்களில் வெளிப்படை தன்மை உள்ளத்தையும் பாராட்டியுள்ளது .

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்த போதும், தொடர்ந்து சீனாவில் குறிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. கொரோனாவின் மாறுபட்ட ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், கோவிட் விவகாரத்தில் சீனாவின் செயல்பாடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் சில கருத்துகளை பகிர்ந்துள்ளது.

அதில் ஒரு புதிய துணை கோவிட் மாறுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் அமெரிக்காவின் “தீவிர வெளிப்படைத்தன்மையை” பாராட்டிய உலக சுகாதார நிறுவனம் ,அதே வேளையில், அதன் பாதிப்பை அறியாமல் கோவிட் தாக்கம் குறித்த கூடுதல் தகவல்களை சீனா பகிர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் மீண்டும் நேற்று வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை இயக்குனர் மைக்கேல் ரியான் செய்தியாளர்களிடம் பேசியபோது,

“சீனாவில் இருந்து இறப்புகள் மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளதாக WHO இன்னும் நம்புகிறது” என்று தெரிவித்தார். அப்போது கோவிட் மரணம் என்றால் என்ன என்பதற்கான பெய்ஜிங்கின் குறுகிய வரையறையை அவர் குற்றம்சாட்டியதோடு, “பொது சுகாதார அமைப்பில் உள்ள மருத்துவர்கள் இந்த வழக்குகள் தொடர்பாக ஏன் புகாரளிக்க வேண்டும் என்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் தொடர்ந்து பேசிய மைக்கேல் ரியான் இதற்கு மாறாக, புதிய Omicron துணை மாறுபாடு XBB.1.5 வேகமாகப் பரவி வரும் நிலையில், யுனைடெட் ஸ்டேட்ஸ் அதாவது அமெரிக்க அதிகாரிகளின் ஒத்துழைப்பை சிறப்பாக இருப்பதாகவும் , “தரவு மற்றும் அந்தத் தரவின் தாக்கம் தொடர்பாக WHO உடன் இணைந்து பணியாற்றுவதில், அமெரிக்காவின் சார்பாக தீவிர வெளிப்படைத்தன்மை உள்ளதாகவும் பாராட்டினார்.

கோவிட்டின்புதிய Omicron துணை மாறுபாடு XBB.1.5 பற்றி இதுவரை கிடைத்திருக்கக்கூடிய அனைத்து தரவுகளையும் பார்க்கும் போது, இது மிகவும் பரவக்கூடிய ஒரு வடிவமாகவே பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading