ராமாயணம் கற்பனைக் கதையா? சட்டப் பேரவையில் சர்ச்சையான விவாதம்

சேது சமுத்திர திட்டம் தொடர்பான விவாத்தின் போது ராமாயணம் என்பது கற்பனை கதையா? என சட்டபேரவையில் இன்று சர்ச்சையான விவாதம் நடந்தது. அதுகுறித்து இந்த பதவில் பார்க்கலாம். தமிழக சட்டப்பேரவையில் இன்று சேது சமுத்திர…

சேது சமுத்திர திட்டம் தொடர்பான விவாத்தின் போது ராமாயணம் என்பது கற்பனை கதையா? என சட்டபேரவையில் இன்று சர்ச்சையான விவாதம் நடந்தது. அதுகுறித்து இந்த பதவில் பார்க்கலாம்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை காங்கிரஸ், பாஜக, தவாக, சிபிஎம், உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து பேசின.

ராமர் பாலம் என்பது ராமாயணத்தை தழுவி வருகிறது என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று சேது சமுத்திர திட்டம் தொடர்பான விவாதத்தின் போது ராமாயணம் என்பது கற்பனை கதையா என்ற விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மாரிமுத்து, ராமரின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடுவோரும், மூடநம்பிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் தான் சேது சமுத்திரதிட்டத்திற்கு தடையாக இருந்தார்கள் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் நாகை மாலி, ராமாயணம் என்பதும் முழுக்க முழுக்க கற்பனை கதை. ராமர் பாலம் என சொல்லி மத்திய அரசு இத்திட்டத்தை கிடப்பில் போட்டது. கற்பனைகளும் நம்பிக்கைகளும் வரலாறு ஆகாது என்று கூறினார்.

இதற்கு பாஜன உறுப்பினர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். நயினார் நாகேந்திரன் பேசுகையில், ராமாயணம் கற்பனை கதை என சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. தெய்வ வழிபாட்டை குறை சொல்வது ஏற்புடையதல்ல. அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெய்வத்தை பற்றி யாரும் குறைசொல்லவில்லை. தெய்வத்தை பயன்படுத்தி இவ்வாறு செய்து விட்டார்கள் என்று தான் பதிவு செய்திருக்கிறார்கள் என்று கூறினார்.

காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை கூறுகையில், ராமாயணம் சிறந்த கற்பனை கதை என்பதை மகாத்மா காந்தியும், நேருவும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள் என்றார்.

அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பின்பற்றும் ராமர் என்பவர் கற்பனை பாத்திரம் என்று அவையில் பதிவாகியிருப்பது எங்கள் மனதை புண்படுத்துகிறது. ராமர் என்பவர் அவதார புருசர் என்று குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.