அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமையை படைத்திருக்கும் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர்ந்து செஸ் விளையாட்டு உலகில் உச்சம் தொட மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன் “. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.




