நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா – பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து!

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “உலகப் புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக செஸ் அரங்கில் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் தனது திறமை, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் இந்த மகத்தான சாதனையைப் படைத்திருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், தமிழருக்கும் பெருமை அளிக்கிறது.

இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக விளங்கும் பிரக்ஞானந்தா, எதிர்காலத்திலும் மேலும் பல சர்வதேச வெற்றிகளைப் பெற்று நாட்டின் புகழை உயர்த்திட வாழ்த்துகிறேன்.

விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் உலக அரங்கில் தொடர்ந்து சாதனைகள் படைக்க இந்த வெற்றி ஒரு புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் உருவாக்கியுள்ளது. பிரக்ஞானந்தா அவர்களின் சாதனைக்கு தேமுதிக சார்பிலும், எனது தனிப்பட்ட சார்பிலும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.