பிரபாஸின் 24-வது திரைப்படம் குறித்து வெளியான புது அப்டேட்!

ஃபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் உருவாகும் பிரபாஸ் 24 வது படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் ஜன. 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பில்…

ஃபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் உருவாகும் பிரபாஸ் 24 வது படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் ஜன. 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று பிரபாஸின் சலார். தெலுங்கில் உருவான இப்படம் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் முதல் முறையாக பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இணைந்து நடித்திருந்தனர். சலாருக்கு அடுத்து ரசிகர்களின் பார்வை பிரபாஸ் நடித்து வரும் கல்கி 2898 AD படத்தின் மீது திரும்பி இருக்கிறது.

இந்நிலையில், கல்கி 2898 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிய 20 நாட்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கல்கி 2898 AD படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில், பிரபாஸின் அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகி உள்ளது. ஃபுள் மீடியா பேக்டரி தயாரிக்கும் பிரபாஸின் 24வது படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் ஜன.15ஆம் நாள் காலை  வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

https://twitter.com/peoplemediafcy/status/1746073529408233561

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.