பிரபாகரன் மற்றும் பிரபாகரன் குடும்பத்தினர் இறந்துவிட்டனர் என நார்வே முன்னாள் அமைச்சரும் ஐக்கிய நாடுகளின் சபையின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குனருமான எரிக் சோல்ஹிம் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் – இலங்கை அரசு இடையே போர் நடைபெற்ற காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவரும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குனருமான எரிக் சோல்ஹிம் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாடு தொழில்துறை மிகுந்த மாநிலம். தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் அங்கம் வகிப்பது அருமையான வாய்ப்பு. தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் ஆற்றல், நகர்ப்புற பிரச்சனைகள் உள்ளிட்டவற்றுக்கு தனித்தனி பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்குழுக்கள் தமிழ்நாடு-2030க்கான இலக்குகளைக் நோக்கி பயணிக்கும்.
கடந்த காலத்தில் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தது. இலங்கையில் நடந்த மிகவும் சோகமான போரின் ஒரு பகுதியாக பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதில் பிரபாகரன் தனது மொத்த குடும்பத்துடன் இறந்துவிட்டார். அவர் தற்போது பிரபாகரன் உயிருடன் இல்லை.
இதனையும் படியுங்கள்: இன்ஸ்டாகிராமில் நடிகர் ரவி மரியா பெயரில் போலி கணக்கு – பணமோசடி செய்யும் மர்ம நபர்கள் மீது புகார்
இலங்கையில் விடுதலைப்புலிகள் – இலங்கை அரசு இடையேயான சமாதானப் பேச்சு வார்த்தையின் போது நான் பிரபாகரனை பலமுறை சந்தித்திருக்கிறேன். பிரபாகரன் இறந்துவிட்டார், அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டனர். அது மிகவும் சோகமான நிகழ்வு.
தற்போது இலங்கை எதிர்காலத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒன்றாக இணைந்து வாழ விரும்புகின்றனர்.” என அவர் தெரிவித்தார்.
எரிக் சோல்ஹிம் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியை காண..
– யாழன்