தமிழகம் பக்தி செய்திகள்

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருப்போரூரில் அறுபடை வீடுகளுக்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார், இக்கோயிலில், கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில், இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த 25ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது, முக்கிய நிகழ்வான, திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

கந்தசாமி பெருமான் வள்ளி தேவானையுடன் காட்சியளித்த திருத்தேரை பக்தர்கள் அரோகரா என பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். திருத்தேரோட்டத்தை தொடர்ந்து வரும் 8ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தீபாவளி பண்டிகை; விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

G SaravanaKumar

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; அதிமுகவில் நாளை முதல் விருப்ப மனு

G SaravanaKumar

முதல்வர் டெல்லி செல்வதால் தமிழகத்திற்கு பயனில்லை-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Web Editor