இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜாவா தீவின் வடக்கு கடற்கரையில் இன்று (வெள்ளிக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. நில நடுக்கம் குறித்த அறிவிப்பை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இன்று மாலை அறிவித்துள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கம் துபானுக்கு வடக்கே 96 கிமீ தொலைவில் உள்ள கடலில் இன்று மாலை சரியாக 3:25 மணியளவில் பதிவாகியுள்ளது.
தற்போது உணரப்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் 594 கி.மீ ஆழத்தில் இருப்பது கடலில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தோனேசியாவின் புவியியல் ஆய்வு மையம் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளது.
சுரபயா, துபான், டென்பசார் மற்றும் செமராங் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டதாகவும் சேதங்கள் குறித்து தகவல் இல்லை , தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் இந்தோனேசிய புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







