நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
நியூசிலாந்தின் வெலிங்டனின் வடமேற்கு பகுதியில் உள்ளூர் நேரப்படி இரவு 7.38 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த மக்கள் பதறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிக்கவும்: எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய புதிய சிஇஓ – கொந்தளிக்கும் ட்விட்டர் பயனர்கள்!
நியூசிலாந்து நாட்டில் கேப்ரியல்லா சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போன நிலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தில் கேப்ரியல்லா சூறாவளி, கனமழை, நிலநடுக்கம் என இயற்கை பேரிடர்கள் அடுத்தடுத்து தாக்கியுள்ளது மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
கடந்த 6ம் தேதி துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு உலகையே அதிர வைத்துள்ளது. அங்கு பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.








