இப்படியும் ஒரு காதலா..! திருமணம் செய்து கொண்ட மூன்றாம் பாலின ஜோடி!

கேரளாவில் காதலர் தினத்தை முன்னிட்டு மூன்றாம் பாலினத்தை சேர்ந்த பிரவீன்நாத் மற்றும் ரிஷானா ஐஷூ ஜோடி திருமணம் செய்து கொண்டனர். பாலக்காடு நென்மாராவைச் சேர்ந்த பிரவீன்நாத் என்பவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி…

கேரளாவில் காதலர் தினத்தை முன்னிட்டு மூன்றாம் பாலினத்தை சேர்ந்த பிரவீன்நாத் மற்றும் ரிஷானா ஐஷூ ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

பாலக்காடு நென்மாராவைச் சேர்ந்த பிரவீன்நாத் என்பவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி ஆவார். கேரளாவின் முதல் திருநம்பி பாடிபில்டர் என பெயர் பெற்ற இவர், 2021-ல் மிஸ்டர் கேரளா பட்டத்தையும் வென்றுள்ளார்.

இதே போல் ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் மலப்புரத்தைச் சேர்ந்த திருநங்கை ரிஷானா ஐஷு. மாடலிங் துறையில் கலக்கி வரும் இவர் மிஸ் மலபார் பட்டம் பெற்றுள்ளார். இருவரும் கல்லூரியில் படிக்கும் போதே நட்பாக பழகி, நாளடைவில் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், திருச்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இருவரும்,  இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், காதலர் தினமான நேற்று  இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் பாலக்காட்டில் நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் , ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருமணம் என்னும் உறவில் முடிந்த இந்த காதல் ஜோடிகளின் திருமணம் பார்பபவர்களை நெகிழ வைத்துள்ளதோடு, திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அவர்களை மனதார வாழ்த்தி சென்றனர்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.