தமிழ்நாடு முழுவதும் நேற்று மின்வெட்டு – பொதுமக்கள் புகார்

தமிழ்நாடு முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் நேற்று மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு…

தமிழ்நாடு முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் நேற்று மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று மதியத்திற்கு மேல் ஒரு மணி நேரத்திற்கு 20 தடவைக்கும் அதிகமான முறை தொடர் மின் வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதேபோல, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர்: திருமாவளவன்’

கடலூர் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நேற்று மாலை 6 மணி முதல் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கானை, சிறுவந்தாடு, உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.

அதேபோல, நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அரை மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடர் மின்வெட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.