முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கொட்டும் அருவி ; ஜன்னலோர ரயில் – பெஸ்ட் காம்போ எவர்..!!

கொட்டும் அருவியை பார்க்கும் படி இரயிலில் ஜன்னலோரத்தில் இருக்கை கிடைத்தால் எப்படி இருக்கும்..? அப்படி ஒரு இடத்தை பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு.

இரயிலின் ஜன்னலோர இருக்கை கிடைத்தாலே பயணிகளுக்கு ஆனந்தம். அதிலும் குறிப்பாக கொட்டும் அருவியை பார்க்கும் வண்ணம் ஜன்னலோர இருக்கை ரயிலில் கிடைத்தால் பேரானந்தம் தான்.

உலகிலியே  மிகப்பெரிய ரயில் வழித்தடங்கள் இந்தியாவில் உள்ளது. கிட்டதட்ட 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே நிலையங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. தினம் தினம் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் ரெயிலில் பயணம் செய்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக வருமானம் வரும் துறையாக ரயில்வே இருந்து வருவதால் ரயிவேக்கு தனி பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பெரும்பாலும் அதிக தூரம் பயணம் செய்யும் நடுத்தர குடும்பங்கள் இரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். அப்படி தேர்வு செய்யும்போது குறிப்பாக Side Lower எனப்படும் இருக்கையையோ அல்லது கீழ் தள இருக்கையையோதான் அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். பெரும்பாலும் இந்த இருக்கைகள் வயது மூத்தோருக்கு அல்லது பெண்களுக்கு வழங்கப்படுகிறது. தப்பித் தவறி இந்த இருக்கைகள் மற்றவர்களுக்கு கிடைத்துவிட்டால் அவர்களுக்கு கொண்டாட்டம்தான்.

இந்த ஜன்னலோர இருக்கைகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே பயணிப்பது பயணிகளுக்கு அலாதியான பிரியம். சில ரயில்களில் பயணிகள் இயற்கை அழகை ரசிப்பதற்காக ஜன்னலோர இருக்கைக்கு செல்லமாக சண்டையிடுவது உண்டு. நண்பர்கள் கும்பலாக பயணம் செய்தார்கள் எனில் ஜன்னலோர இருக்கையில் நான்கு பேர் அமர்ந்து கூட நெருக்கமாக பயணம் செய்வார்கள்.

கடந்த 17ம் தேதி  இந்திய ரயில்வே துறை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ரயிலின் வீடியோவை பகிர்ந்திருந்தனர். அதில் ஒரு அருவியை ரயில் ஒன்று கடந்து செல்கிறது. இந்த வீடியோவிற்கு பலரும் லைக் செய்து வருகின்றனர்.

ரயில்வே வெளியிட்டுள்ள இடம் மகாராஷ்ட்ரா மாநிலம் ரன்பாத்தில் உள்ள உக்‌ஷி அருவிதான். அருவியின் முன்பு ரயில் ஒன்று சீறிப் பாய்கிறது. இந்த காட்சி பார்ப்பதற்கே மிக அழகாக உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டுமென பதிவிட்டு வருகின்றனர்.

இதனையும் படியுங்கள்: காதலில் தோல்வி அடைந்தால் இன்சூரன்ஸா..? – எப்புட்ரா..??

இதைப்போலவே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரக்கு செல்லக்கூடிய ரயிலும் மிக அழகாகவும், இயற்கை எழில் கொஞ்சும் பயணமாகவும் கிட்டத்தட்ட 58 குகைகளையும், 84 ரயில் பாலங்களையும் கடந்து ரயில் பயணிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிப்பதற்கு பயணிகள் மாதக்கணக்கில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜாதி – மதம் இல்லை எனச் சான்றிதழ்; இரண்டு வாரங்களில் வழங்க உத்தரவு!

Arivazhagan Chinnasamy

அதானி விவகாரம்: பிப்.6இல் நாடு முழுவதும் போராட்டம்-காங்கிரஸ் அறிவிப்பு

Web Editor

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்; மலர்தூவி முதலமைச்சர் மரியாதை

Arivazhagan Chinnasamy