சிவகங்கை அருகே நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கம்புணரியை அடுத்துள்ள உலகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகராஜன், புவனேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு…

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள்
குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கம்புணரியை அடுத்துள்ள உலகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகராஜன்,
புவனேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு யாழினி என்கிற 10 வயது மகள் உள்ளார்.
அதேபோல் லட்சுமணன், தனம் தம்பதியருக்கு 7 வயதில் மகேந்திரன் என்கிற மகனும் 5
வயதில் சந்தோஷ் என்கிற மகனும் உள்ளனர். நாகராஜனும், லட்சுமணனும்
சகோதரர்களாவர்.

இந்நிலையில், சிறுமி யாழினி, சிறுவர்களான மகேந்திரன், சந்தோஷ்
மூவரும் அதே ஊரில் உள்ள படமஞ்சி செட்டி குளத்துக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
ஆழம் தெரியாமல் உள்ளே இறங்கிய சிறுவர்கள் மூன்று பேரும் தண்ணீரில்
மூழ்கியுள்ளனர். இதனை கண்ட கிராம மக்கள் அவர்களை தண்ணீரிலிருந்து மீட்க முயன்றனர். ஆனால்,  சிறுவர்கள் மூன்று பேரும் உயிரழந்தனர்.

இதையும் படிக்க: ’ஷேட்ஸ் ஆஃப் வந்தியத்தேவன்’ – மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு

உடனடியாக சிங்கம்புணரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூன்று சிறுவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.