கொட்டித் தீர்த்த மழை – தாலி கட்டிக் கொண்ட மணமக்கள் : மழையில் நடந்த சுவாரஸ்யமான திருமணம்

கொட்டித் தீர்த்த மழையிலும் திருமணத்தை நிறுத்தாமல் தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட மணமக்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு பெண் பார்த்து, நிச்சயதார்த்தம் முடித்து , பத்திரிக்கை அடித்து சொந்தம் பந்தம் என…

கொட்டித் தீர்த்த மழையிலும் திருமணத்தை நிறுத்தாமல் தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட மணமக்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு பெண் பார்த்து, நிச்சயதார்த்தம் முடித்து , பத்திரிக்கை அடித்து சொந்தம் பந்தம் என ஊர் முழுக்க விநியோகித்து, திருமண நாளன்று பந்தக்கால் நட்டு தாலி கட்டும் நேரத்தில் ஊரே கூடியிருக்கும் நிலையில் மழை பயங்கரமாக கொட்டித் தீர்த்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்..?

சிலர் திருமணத்தை சில மணி தள்ளி வைப்பார்கள், சிலர் மழையை திட்டித் தீர்ப்பார்கள், சிலர் வேறு வழியின்றி மழை நிற்கும் வரை காத்திருந்து திருமணம் முடிப்பார்கள். ஆனால் ஒரு தம்பதி மழை கொட்டித் தீர்த்த போதும் எந்த பதற்றமும் இல்லாமல் மழையிலே திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கான அனைத்து அலங்காரங்கள், மேடைகள், நடனக் குழு, மணமக்கள் என அனைவரும் தயார் நிலையில் இருந்தபோது திடீரென் எதிர்பாரதவிதமாக மழை பெய்ததால் மணமக்கள் இருவரும் பதற்றமடையமால் மழையில் நனைந்தபடியே ஜோடியாக மேடைக்கு நடந்து வந்தனர்.

நடனக் கலைஞர்கள் நடனமாடிக் கொண்டே இருந்தனர். வண்ண விளக்குகள், வான வேடிக்கைகள் என எதுவுமே நிறுத்தப்படவில்லை. நனைந்து கொண்டே மணமேடைக்கு வந்த மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு தங்களது திருமணத்தை செய்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.