கேரள மாநிலம் இடுக்கியில் தமிழ்நாட்டில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி சாலை வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இடுக்கி அருகே கொல்லம்- தேனி நெடுஞ்சாலையில் தமிழ்நாட்டில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றி சென்ற லாரி கடுவாபாறை என்ற இடத்தில் சாலை வளைவில் திரும்ப முற்பட்டபோது பாரம் தாங்காமல் ஒரு பக்கமாக சாய்ந்து, அருகில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது கவிழ்ந்தது.
இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் ஆட்டோவை ஓட்டிய மெல்பின் என்பவர் வாகனத்தின் அடியில் சிக்கி கொண்டார். உடனடியாக சம்பவம் அறிந்து விரைந்த வந்த தீணையப்புத்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வாகனத்தின் அடியில் சிக்கிய மெல்பினை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சி பலளிக்காத நிலையில் கிரேன் வரவழைக்கப்பட்டு மெல்பினை மீட்கும் பணி மேற்கொண்டனர். ஆனால் பலத்த காயங்களுக்களுடன் மீட்கப்பட்ட மெல்பின் அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
லாரியின் ஒட்டுனர் சாரதி காயங்கள் இன்றி உயிர்தப்பினார்.இதனிடையே விபத்து காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை சீர்செய்தனர்.







