உலகின் 8வது அதிசயம் பிரதமர் மோடி! #Tirunelveli -ல் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு உலகின் 8-வது அதிசயம் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மோடிக்கு பூங்கொத்து கொடுப்பது போன்ற படத்துடன் சுவரொட்டி பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. நாட்டின் பிரதமராக 3-வது முறையும்…

poster ,Chief Minister ,Jayalalithaa, PMOIndia, Modi ,birthday ,

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு உலகின் 8-வது அதிசயம் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மோடிக்கு பூங்கொத்து கொடுப்பது போன்ற படத்துடன் சுவரொட்டி பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.

நாட்டின் பிரதமராக 3-வது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் , மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் என்பவர் உலகின் எட்டாவது அதிசயமே என்ற பெயரில் போஸ்டர் ஒட்டி மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் நரேந்திர மோடி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து பரிமாறுவது போல் படம் அச்சிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் :“இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த #Iran தலைவர் கருத்துக்கு இந்தியா கண்டனம்!

மேலும், அந்த பேனரில் நெல்லை எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனின் படமும் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு இடையே பனிப்போர் நடைபெற்று வரும் நிலையில் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு நிர்வாகி ஒருவர் நரேந்திர மோடியும் ஜெயலலிதாவும் இருக்கும் ஒரே படத்தினை போஸ்டராக ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாஜக அதிமுக இடையே மீண்டும் கூட்டணி உறவு ஏற்படுமா என்ற பேச்சு பரவலாக எழுந்த நிலையில் இந்த சுவரொட்டி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.