“சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு” – வானிலை இயக்குநர் துரை

சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது, 25 தேதி கன மழைபெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குர் துரை தெரிவித்துள்ளார்.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குர் துரை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “இன்று காலை 5.30 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அக்.23 தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வலுவடைந்து மேற்கு திசையில் நகர வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. மூன்று மாவட்டத்தில் மிக கனமழையும் 13 மாவட்டங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. சென்னையில் எம்ஜிஆர் பகுதியில் அதிகபட்சமாக 15.04 மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஆரஞ்சு நிறைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிர எச்சரிக்கை சிவப்பு நிற எச்சரிக்கையாக மாற வாய்ப்பு குறைவு. மிக கனமழை இரண்டு நாட்கள் தொடர்ந்தால் மூன்றாவது நாட்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்படும்.

சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழை உள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு 25ஆம் தேதி கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோரப் பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று இருக்கும். மீனவர்கள் கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

சென்னைக்கும் இன்று இரவு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். அக்டோபர் மாதத்தைவிட நவம்பர் மாதங்களில் தான் அதிக, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். வட தமிழகத்தில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாகத்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னைக்கு சிவப்பு நிற எச்சரிக்கை கொடுத்தோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.