முக்கியச் செய்திகள் தமிழகம்

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலுக்கும் வாய்ப்பு – மாஃபா.பாண்டியராஜன்

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுகவின் பொன்விழா மற்றும் 51ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் நலிவடைந்த கட்சி நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், “அதிமுக எல்லா சமுதாயத்தையும் ஒன்றாக பார்க்கக் கூடிய கட்சி. திமுக ஆட்சியில் தற்போது மின்வெட்டு அதிகரித்துள்ளது. மின் வெட்டும் திமுகவும் ஒட்டிப்பிறந்தது. திமுக பொதுக்குழுவில் வைத்தே அமைச்சர்களின் செயல்களை பார்த்து என் உடம்பு ஒரு மாதிரி ஆகிவிட்டது என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.

தமிழக மக்களை இழிவுபடுத்திப் பேசும் திமுக அமைச்சர்களை தூக்கி வெளியே அனுப்ப முடியுமா? அதிமுகவில் கடைக்கோடி தொண்டனும் கூட அதிமுகவில் பெரிய பதவிக்கு வர முடியும். ஆனால் திமுகவில் ஸ்டாலின் ஒரு பக்கம் உதயநிதி, கனிமொழி என ஒரு பக்கம், மற்றொரு பக்கம் தனது சொந்தகாரர் ராஜா என கட்சியில் திமுக குடும்ப அரசியல் தான் உள்ளது.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்னும் இரண்டு மாதத்தில் நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார். திமுகவின் 16 மாத கால ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு இருப்பதால் தான், கண்டா வரச்சொல்லுங்க, எடப்பாடி பழனிசாமியை கண்ட வரச்சொலுங்க என பாடும் அளவிற்கு திமுக ஆட்சி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடிகை சன்னி லியோனுக்கு பூசாரிகள் எதிர்ப்பு

Halley Karthik

இன்று மாலைக்குள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் கே.என்.நேரு

EZHILARASAN D

தெலுங்கு நடிகருடன் காதலா? – லாவண்யா விளக்கம்

EZHILARASAN D