ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அரசுமுறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமராக அன்டோனியோ குட்டரெஸ் இருந்துள்ளார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து இந்தாண்டும், ஜனவரி 1-ம் தேதி முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவர் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியா வரும் ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள அண்டோனியோ குட்டரெஸ் இந்தியா வருவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் சில முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





