பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் காலமானார்

பிரபல மலையாள திரைப்பட நடிகர் இன்னசென்ட் (75) காலமானார். அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் இன்னசென்ட் (75).…

பிரபல மலையாள திரைப்பட நடிகர் இன்னசென்ட் (75) காலமானார். அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் இன்னசென்ட் (75). இவர் மலையாள சினிமா சங்கத்தின் தலைவராகவும் 15 ஆண்டுகள் இருந்துள்ளார். 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவரின் நடிப்பில் காந்தி நகர் 2ஆம் தெரு, முகுந்தேட்டா சுமித்ரா விழிக்குனு, அக்காரே நின்னொரு மாறன், ராம்ஜிராவ் ஸ்பீக்கிங், தூவல்பர்ஷம் உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

இதையும் படிக்கவும் : மகளிர் பிரீமியர் லீக்; டெல்லியை வீழ்த்தி கோப்பையை வென்றது மும்பை அணி!

இவர் திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரத்திலும், குணசித்திர கதாபாத்திலும் நடித்துள்ள அவர் 1972 ல் நிருதாசாலா திரைப்படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானர். 2014 ல் சாலகுடிக்கு தொகுதி எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் இன்னசென்ட் கேரள மாநிலம்  கொச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மார்ச் 3 ம் தேதி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.  சுவாசப் பிரச்சினைகள் மற்றும் மாரடைப்பு  காராணமாக நேற்றிரவு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திடீரென சுவாச கோளாறு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.