மகளிர் பிரீமியர் லீக்; டெல்லியை வீழ்த்தி கோப்பையை வென்றது மும்பை அணி!

மகளிர் பிரீமியர் லீக் போட்டியில்  134 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது.  மகளிர் பிரிமீயர் லீக் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும்…

மகளிர் பிரீமியர் லீக் போட்டியில்  134 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது. 

மகளிர் பிரிமீயர் லீக் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் சேர்த்தது. ஷிகா பாண்டே 27 ரன்களுடனும் (17 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), ராதா யாதவ் 27 ரன்களுடனும் (12 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். மும்பை தரப்பில் இசி வோங், மேத்யூஸ் தலா 3 விக்கெட்டுகளும், அமெலியா கெர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

132 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளான யாஸ்திகா பாட்டியாவும், ஹெய்லே மேத்யூசும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு நாட் சிவெரும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் இணைந்து நிதானத்தை கடைபிடித்தனர். ஹர்மன்பிரீத் கவுர் 37 ரன்களில் ரன்-அவுட் ஆனார்.

கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 5 ரன் தேவையாக இருந்தது. பரபரப்பான இறுதி ஓவரை அலிஸ் கேப்சி வீசினார். 2 பந்துகளில் 3 ரன் எடுத்த நிலையில் 3-வது பந்தை நாட் சிவெர் பவுண்டரிக்கு தூக்கிவிட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார். மும்பை அணி சாம்பியன் மும்பை அணி 19.3 ஓவர்களில் 134 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.நாட் சிவெர் 60 ரன்களுடனும், அமெலியா கெர் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் இந்த போட்டியில் முதல் சீசனிலேயே மும்பை அணி மகுடம் சூடியது. வெற்றி பெற்ற மும்பை அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த டெல்லி அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.