பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!

திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயில் பூச்சொறிதல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சிறிய…

திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயில் பூச்சொறிதல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சிறிய வகை மாடுகள், பெரிய வகைமாடுகள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இப்பந்தயத்தில் மதுரை,
சிவகங்கை , புதுக்கோட்டை ,இராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 31 ஜோடி மாடுகள் பங்கேற்கற்றன.

இதில் பெரியமாடுகளில்12 ஜோடி மாடுகளும் சிறிய மாடுகளில் 19 ஜோடி மாடுகளும் பங்கேற்ற நிலையில், வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும் , அதன் சாரதிகளுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. விறு, விறுப்பாக நடைபெற்ற பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் நின்று ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.