“பொன்னியின் செல்வன்” வரலாற்று கதையை இணையத் தொடராக தயாரிக்கும் பணிகளை, இன்று தொடங்கியுள்ளதாக செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
1950-ல் கல்கி வார இதழில், பொன்னியின் செல்வன் வரலாற்று கதை, 5 ஆண்டுகளாக தொடராக வெளிவந்தது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசு காலத்தை சேர்ந்த வரலாற்று கதையாகும்.கல்கி எழுதிய இத்தொடர் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், தனி புத்தகமாகவும் வெளியாகி விற்பனையிலும் சாதனை படைத்தது. ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் தற்போது திரைப்படமாக எடுத்து வருகிறார்.
இதனிடையே, இக்கதையை வெப் சீரிஸாக தயாரிக்கப் போவதாக நடிகர் ரஜினிகாந்தின் மகளான செளந்தர்யா அறிவித்திருந்தார். அதன்படி, விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று தனது வெப் சீரிஸ் பணிகளைத் அவர் தொடங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் செளந்தர்யா ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/soundaryaarajni/status/1436232928111988761








