முக்கியச் செய்திகள் இந்தியா

பிளாட்பாரத்தில் வசிக்கும் முன்னாள் முதலமைச்சரின் மைத்துனி

முன்னாள் முதலமைச்சரின் மைத்துனி, நடைபாதையில் வசித்து வருவது அதிர்ச்சி யை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா. 10 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆண்ட இவருடைய மனைவியின் சகோதரி இரா பாசு (Ira Basu). வாழ்க்கை அறிவியல் ஆசிரியையான இவர், வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பிரியநாத் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் 34 வருடங்கள் பணியாற்றியவர்.

முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு
பாரா நகரில் வசித்து வந்தார். பிறகு கர்டா அருகில் உள்ள லிச்சு பகன் என்ற
இடத்தில் வசித்து வந்தார். பிறகு என்ன ஆனார் என்று தெரியாத நிலையில், கடந்த
இரண்டு வருடமாக கொல்கத்தா டன்லப் பகுதியில், சாலையோரத்தில் வசித்து
வருவது தெரிய வந்துள்ளது.

நிறம் மங்கிய நைட்டியை அணிந்தபடி, அங்கிருக்கும் வியாபாரிகளிடம் உணவு பெற்று கொண்டு வசித்து வருகிறார். இதுபற்றி பேசிய அவர், நான் என் சொந்த முயற்சியில் ஆசிரியை ஆனேன். முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உறவினர் என்பதை பலர் அறிந்திருந்தாலும் எனக்கு எந்த விஐபி அடையாளமும் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆசிரியர் தினத்தன்று டன்லப் தொழிலாளர்கள் அழைத்து அவரை கவுரவவித்துள்ளனர். அப்போது அவர் பேசும்போது, அனைத்து ஆசிரியர்களும் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். பல மாணவர்கள் என்னை அடையாளம் வைத்துள்ளனர். சிலர் என்னை அணைக்கும்போது கண்ணீர் வடிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இரா பாசு, சாலையோரத்தில் வசிப்பது பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலான தை அடுத்து, அவரை மாவட்ட நிர்வாகம் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத் துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறது.

இதற்கிடையே, பிரியநாத் பெண்கள் உயர் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ண காளி சந்தா கூறும்போது, அவருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆவணங்களை சமர்பிக் கும்படி கேட்டிருந்தோம். அவர் சமர்பிக்கவில்லை. அதனால் அவருக்கு ஓய்வூதியம் கிடைக் கவில்லை’ என்றார்.

Advertisement:
SHARE

Related posts

சிறுவனை முட்டிய மாடு; வெளியானது சிசிடிவி காட்சி

Saravana Kumar

இந்தியாவில் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் Pfizer நிறுவனம்!

Arun

கர்ணன் நிச்சயம் நாளை வருவான்: தயாரிப்பாளர் தாணு

Ezhilarasan