முக்கியச் செய்திகள் சினிமா

பகைவனுக்கு அருள்வாய் – டீசர் வெளியீடு

சசிகுமாரின் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில், இயக்குநர் அனீஸ் அழநாடனின்  பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ஜெய் மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படத்தை இயக்கியவர் அனீஸ் அழநாடன். இவரது அடுத்த படைப்பான பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், நடிகைகள் வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர்கள் சித்தார்த், விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் இயக்குநர்கள் வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் ஆகியோர் மாலை 4.45 மணிக்கு திரைப்படத்தின் டீசரை ட்விட்டரில் வெளியிட்டனர்.

பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக கார்த்திக் கே.தில்லை, இசையமைப்பாளராக ஜிப்ரான் மற்றும் எடிட்டராக காசி விஸ்வநாதன் ஆகியோர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!

Vandhana

புதிய தொழில் கொள்கைக்கு நன்றி தெரிவித்த டான்சியா!

Niruban Chakkaaravarthi

அத்தியாவசியப் பொருட்கள் விலையைக் கட்டுப்படுத்த வழக்கு: உயர்நீதிமன்றம் அறிவுரை

Ezhilarasan