திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் மாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான, படுகளம் சாய்தல், பின் எழுப்புதல் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
கி.பி.1020-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப்பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னராக ஆட்சி புரிந்த பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் வீர வரலாற்று சிறப்புமிக்க மாசிப்பெருந்திருவிழா, மணப்பாறை அருகே வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயிலிலும், பொன்னிவளநாட்டிலும் கடந்த 20-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீரவரலாற்று படுகளம் சாய்தல், பின் எழுப்புதல் நிகழ்வு நேற்றிரவு படுகளம் கன்னிமார் மற்றும் குளக்கரை கருப்பசாமி, மகாமுனி, பொன்னர் – சங்கர், தங்காள் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கொங்கு மண்டலத்திலிருந்து குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களில் ஆங்காங்கே ஆண்களுக்கு மறுள் வருகிறது பின் அப்படியே சாய்ந்து விடுகின்றனர். இவர்கள் அண்ணன்மார் தெய்வங்களுடன் இணைந்து போரிட்டு மடிந்தவர்களாக பார்க்கப்படுகிறது.
அவர்கள் அனைவரும் போரிட்டு மடிந்தவர்களாக வரிசைப்படுத்தப்படுகின்றனர். நூற்றுக்கணக்கானோர் வரிசைப்படுத்தப்பட்டனர். பின் பெரியக்காண்டியம்மன் ஆலயத்திலிருந்து மின் அலங்கார தேரில் கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தக்குடம் வரிசைப்படுத்தப்பட்டவர்கள் பகுதியில் வைக்கப்பட்டது. கூட்டத்தில் ஆலயத்தில் வலது பகுதியிலிருந்து 12 வயது சிறுமி அழுதுக்கொண்டே தீர்த்தக்குடத்திற்கு வந்தார். பெரியக்காண்டியம்மனை வணங்கி தீர்த்த குடத்தை எடுத்துக்கொண்டார். பின் மாண்டவர்களாக வரிசைப்படுத்தப்பட்டவர்கள் மீது தீர்த்தத்தை தெளிக்க அவர்கள் மீண்டும் உயிர்பித்து எழுந்தது போன்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.