முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தோல்வி பயத்தில் அதிமுகவினர் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்- அமைச்சர் கே.என்.நேரு

ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி பயத்தில் அதிமுக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி
வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி பஞ்சவர்ணசாமி கோயில் தெருவில் புதிய அங்கன்வாடி மையத்தை நகராட்சி
நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும். அதிமுக தேர்தல் தோல்வி பயத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர் என்று கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும்: சென்னை-புதுச்சேரி இடையிலான வர்த்தக கப்பல் போக்குவரத்து தொடக்கம்

தொடர்ந்து பேசிய அவர், திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவிரி பாலத்தில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து தார் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவடைந்து இன்னும் ஓரிரு நாளில் பாலம் திறக்கப்படும். குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் போது பொதுமக்களுக்கு ஒரு சில அசெளகரியங்கள் வரும். ஆனால் நீண்ட கால தீர்வுக்கு அது தான் வழி. பொதுமக்கள் சிரமங்களை பொறுத்து கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், திருச்சி மாநகரட்சி விரிவுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 24 மணி நேரம் குடிநீர்
வழங்குவதற்கும், பாதாள சாக்கடை திட்டமும், சாலை வசதிகளும் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனை என்பது இல்லை. கோவை, சேலம், சங்கரன்கோவில்,
நாகர்கோவில், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் மெட்ரோ ஆய்வு பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர்
பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை இலக்கியத் திருவிழா – கல்லூரி மாணவர்களுக்கு இத்தனைப் போட்டிகளா?

G SaravanaKumar

ஜனவரி 4ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்

Web Editor

‘அப்படி சொல்லாவிடினும் அவருக்கு அது தரலாம்’ – இளையராஜா குறித்து ஓய்.ஜி மகேந்திரன்

Web Editor