புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார
பகுதிகளில் கொட்டி தீர்த்த கோடை மழையால், வெப்பம் தணிந்து
இதமான வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வானிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர்
கோடை மழை கொட்டி தீர்த்தது.
தொடர்ந்து, விடாது அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. மேலும், குளிர்ந்த இதமான வானிலை நிலவியது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
—கு.பாலமுருகன்







