புதுக்கோட்டையில் காலை முதல் பெய்த கனமழையால், பள்ளி வளாகத்திற்கு மழைநீர் புகுந்ததால் மாணவ, மாணவிகள் அவதி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை முதல் இரண்டு மணி நேரம் தொடர்ந்து இடியுடன் பெய்த கனமழையால், சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மழைநீர் தேங்கியது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல அவதிப்பட்டனர்.
புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் நகரிலுள்ள வடிகால்களை முறையாக துார்வராப்படாததால் வாய்க்காலில் செல்ல வேண்டிய சாக்கடை நீர், மழை நீர் சாலைகளில் ஓடி பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. மேலும் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் முறையாக வாய்க்கால்களை துாற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
—-அனகா காளமேகன்







