சென்னையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 21 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில், 6 இடங்களில் சோதனையானது நிறைவு பெற்றுள்ளன.
ஜி ஸ்கொயர் நிறுவனம் 2012 ஆண்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு கொடுங்கையூர், மணலி, ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணா நகர், நீலாங்கரை,
கோவை, திருச்சி, மைசூர், ஹைதராபாத், கர்நாடாக உள்ளிட்ட இடங்களில் இதனுடைய கிளை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் தொடங்கியது முதல் ஆண்டு ஒன்றுக்கு 56 கோடி ரூபாய் வருமான ஈட்டி வந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது அதன் வருமானம் 35 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக கூறப்படுகிறது. மேலும், வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் இந்நிறுவனத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
இதையும் படியுங்கள் : விஏஓ கொலை வழக்கு – மேலும் ஒருவர் அதிரடி கைது!
சென்னையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய 21 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், சேத்துப்பட்டு, தேனாம்பேட்டை, அமைந்தகரை, ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம், அடையாறு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஜி ஸ்கொயர் அலுவலகங்களிலும், அந்நிறுவனத்திற்கு தொடர்புடைய முக்கிய நிர்வாகிகளின் இல்லங்களிலும் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளன.
சென்னையில் மீதமுள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 15 இடங்களில் சோதனை தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஹைதரபாத்தில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.








