தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு ஜனவரி 3-ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஜனவரி 3-ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தகுதிவாய்ந்த அனைவருக்கும் சிறப்பு தொகுப்பு, தரமான பொருட்களாக வழங்க வேண்டும் எனவும், திட்டத்தை ஒருங்கிணைந்து திறம்பட செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு, அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்களுக்கு இந்த சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.