மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்று தராத பாஜக தலைவர் அண்ணாமலை மழை காலங்களில் தவளை சத்தம் போடுவது போல் பேசி வருகிறார் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ பொதுநல அமைப்பு சார்பில் மதநல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தங்கள் இருப்பை காட்டிக் கொள்வதற்காகவே அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபடுவதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பொய்யாகப் பேசி வருவதாகவும், அவர் உண்மையை பேசியிருந்தால் மத்திய அரசிடம் மழை வெள்ள நிவாரண உதவியை கேட்டிருப்பார் என்றும் தெரிவித்தார்.
அதேபோல, அதிமுகவின் போராட்டம் குறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, போராட்ட தேதியை கூட தவணை முறையில் அறிவிக்கும் கட்சி அதிமுக எனவும், அரசியல் களத்தில் அடையாளம் காட்டிக்கொள்ளவே அதிமுக போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார்.