உங்கள் பகுதி பள்ளி கட்டடங்கள் மோசமாக உள்ளதா? – நிரந்தர தீர்வை நோக்கி நியூஸ் 7 தமிழ் முன்னெடுப்பு

மக்களின் குறைகளை நியூஸ் 7 தமிழ் தொடர்ந்து அரசுக்கு தெரிவித்து வருகிறது. இதன் மூலமாக பல பகுதிகளில் மக்களுக்கு உடனடி தீர்வும் கிடைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த கனமழையின் போது பல பகுதிகள்…

மக்களின் குறைகளை நியூஸ் 7 தமிழ் தொடர்ந்து அரசுக்கு தெரிவித்து வருகிறது. இதன் மூலமாக பல பகுதிகளில் மக்களுக்கு உடனடி தீர்வும் கிடைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த கனமழையின் போது பல பகுதிகள் வெள்ளப்பெருக்கால் பலத்த சேதமடைந்தன. மேலும், தண்ணீர் தேங்கி நோய் பரவும் ஆபத்தும் நிலவியது. அந்த சமயத்தில் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்தி இதுகுறித்த செய்திகளை அரசுக்கு தெரியப்படுத்தியது. இதன்மூலம் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டதோடு அவர்களின் பிரச்னைகளுக்கும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு எடுத்தது.  இதேபோல், தக்காளி விலை ஏற்றத்தின்போதும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள், விற்பனையாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட பலரின் நியூஸ் 7 பிரம்மாண்ட கள ஆய்வு நடத்தியது.

இந்தநிலையில் பாதுகாப்பான பள்ளி கட்டடங்களை உறுதி செய்யும் நோக்கில் சிறப்பு முன்னெடுப்பு ஒன்றை நியூஸ் 7 தமிழ் எடுத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் நெல்லையில் பள்ளியின் சுற்று சுவர் கட்டம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமும் ஒன்று. இச்சம்பவத்தை தொடர்ந்து 38 மாவட்டங்களில் உள்ள பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்ய 19 கல்வி அலுவலர்கள்  பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது.

நியூஸ் 7 தமிழ் எடுத்துள்ள முன்னெடுப்பின்படி உங்கள் மாவட்டங்களில் உள்ள மோசமான பள்ளி கட்டிடங்கள் குறித்த தகவல்களை சேகரித்து அரசுக்கு தெரியப்படுத்துவதே எங்கள் நோக்கம். இதற்காக பிரத்யேகமாக WhatsApp எண் ஒன்றையும் அளித்துள்ளோம். உங்கள் பகுதியில் உள்ள மோசமான பள்ளி கட்டடங்கள் குறித்த புகைப்படங்கள்/வீடியோக்களை 77082 44175 என்ற எண்ணிற்கு அனுப்புங்கள். அதை நியூஸ் 7 தமிழ் செய்தியாக வெளியிட்டு அரசுக்கு தெரியப்படுத்தும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.