பொங்கல் பண்டிகை | தனியார் பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயர்வு!

பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் தனியார் பேருந்துகளின்  பன்மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.

Pongal Festival | The fares of private buses have increased manifold

பொங்கல் பண்டிகையோட்டி தொடர் விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான தனியார் பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதிகமான மக்கள் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகை தரும் நிலையில் கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், தனியார் பேருந்துகளின் கட்டணம் அதிகரிக்கும் என தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த, சில தினங்களாக 450 ரூபாய் என இருந்த இருக்கைக்கான கட்டணம் தற்போது, தனியார் பேருந்துகளின் கட்டணம் 3,200 ரூபாயை கடந்துள்ளது.

தனியார் பேருந்துகள், அதிக கட்டணம் வசூலிக்க கூடாது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற அறிவிப்பை மீறியும் அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதானல், தனியார் பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.