#Pongal பண்டிகை | நாளை முதல் 4 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் 17-ம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

#Pongal Festival | Changes in Metro Rail services for 4 days from tomorrow!

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் 17-ம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் வரும் 16-ம்தேதி வரை ஞாயிறு அட்டவணையின்படியும், 17-ம்தேதி சனிக்கிழமை அட்டவணையின்படியும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2025-ம் ஆண்டு ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் 16 (வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின்படியும், 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) சனிக்கிழமை அட்டவணையின்படியும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணை:

காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள்இயக்கப்படும்.

இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

சனிக்கிழமை அட்டவணை:

காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணிமுதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.