தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை முன்னிட்டு, நாளை முதல் ஜன.19 வரை தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டை ஒட்டியுள்ள 6 கேரள மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளித்து, அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.







