சென்னை ஆவடியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் டிஜிபி சைலேந்திர பாபு பறை இசைத்து நடனமாடியது காவலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 2ஆம் அணி சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துக்கொண்ட இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.
பேண்டு வாத்தியம், நாதஸ்வரம் என இன்னிசையுடன் நடைபெற்ற விழாவில் காவலர்கள் வேட்டி, சேலை அணிந்து கலந்து கொண்டனர். விழாவில் பறை இசை கலைஞர்களுடன் வாத்தியத்தை இசைத்தபடி டிஜிபி சைலேந்திரபாபு, நடனமாடி அசத்தினார்.
உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், மல்லர் கம்பம் ஏறுதல், ரங்கோலி கோலம் போட்டிகள், பரதநாட்டியம், ஏரோபிக்ஸ் நடனம், சிலம்பம், வாள்வீச்சு போன்ற பாரம்பரிய பண்பாட்டு சாகச நிகழ்ச்சிகளும் விழாவில் இடம்பெற்றன.







