பொள்ளாச்சி மாரியம்மன் கோயிலில் வெள்ளி தேர் திருவிழா!

பொள்ளாச்சி உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலின்  வெள்ளி தேர் திருவிழா வெகு விமா்சையாக நடைபெற்றது. பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கடந்த பங்குனி மாதம் முதல் செவ்வாய்கிழமை…

பொள்ளாச்சி உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலின்  வெள்ளி தேர் திருவிழா வெகு விமா்சையாக நடைபெற்றது.

பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கடந்த பங்குனி மாதம் முதல் செவ்வாய்கிழமை நோன்பு சாட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பூவோடு எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வந்தனா்.

அதனை தொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக, அம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் சிவப்பு நிற பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  மேலும் உத்திரோட்டமானது மூன்று நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

—கா. ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.