கொடைக்கானல் பேரிஜம் சுற்றுலா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாதலமான பேரிஜம் வனப்பகுதி உள்ளது. கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தில் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, போன்ற வனவிலங்குகள் உள்ளன.
இங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வன அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்று செல்ல வேண்டும் ஏனெனில் இச்சுற்றுலா பகுதி வனத்துறை கட்டுபாட்டில் இருக்கிறது. இந்நிலையில் பேரிஜம் சுற்றுலா பகுதியில் 5 காட்டு யானைகள் குட்டியுடன் இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
—அனகா காளமேகன்







