திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடல் வழியாக இலங்கைக்கு
கடத்த இருந்த 300 கிலோ கஞ்சாவை, கியூ பிரிவு போலீசார் பறிமுதல்
செய்து 3 நபர்களை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை அலையாத்திக்
காடு வழியாக இலங்கைக்கு கஞ்சா முட்டை கடத்த இருப்பதாக, திருவாரூர் க்யூ
பிராஞ்ச் போலீசார், முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் மற்றும் இன்ஸ்பெக்டர்
ராஜேஷ் தலைமையில், போலீசார் முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் அதிரடி
சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, அங்குள்ள லகூன் திட்டு பகுதியில் 3 பேர் சந்தேகத்திற்கு இடமாக
நின்றதை தொடர்ந்து, போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்பொழுது
அங்கு 10 மூட்டை கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார்
நடத்திய விசாரணையில் மூன்று பேரும் முத்துப்பேட்டை காளியம்மன் கோவில்
தெருவை சேர்ந்த முருகானந்தம், அதே பகுதியை சேர்ந்தமகேந்திரன் மற்றும்
கோவிலூர் மெயின் ரோட்டை சேர்ந்த சசிகுமார் என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் அதிராம்பட்டினத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சாவை
இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார்
அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட
கஞ்சா சுமார் 300 கிலோ எடை உள்ளது எனவும், இதன் சந்தை மதிப்பு 10 லட்சம்
எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பெறும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
கு. பாலமுருகன்







