ஆப்பிள் நிறுவனம் ’விஷன் ப்ரோ’ என்று அழைக்கப்படும் முதல் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளது. ‘விஷன் ப்ரோ’ என்று அழைக்கப்படும் இந்த வகை ஹெட்செட் முதன்மையாக ஒரு ஆக்மென்ட் ரியாலிட்டி சாதனமாக அறிமுகமாகி உள்ளது. இந்த ஹெட்செட்டில் உள்ள பட்டனை பயன்படுத்தி எளிதாக AR மற்றும் VR முறைகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
மற்ற ஹெட்செட்களைப் போன்று இல்லாமல், இந்த விஷன் ப்ரோவில், பயனர்கள் தங்கள் கண்கள் மற்றும் கைகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். பயனர்கள் ஸ்க்ரோல் செய்வது, மற்றும் சிரி செயலியை உபயோகப்படுத்துவது போன்றவற்றை இந்த ஹெட்செட் மூலம் செய்துகொள்ளலாம். ஆப்பிள் கம்ப்யூட்டர், லேப்டாப், டி.வி போன்றவற்றிலும் ப்ளூடூத் மூலம் இந்த ஹெட்செட்டை இணைத்து பயன்படுத்தலாம். இந்த ‘விஷன் ப்ரோ’ எடை குறைவு என்பதால் பேட்டரி பேக்கப் 2 மணிநேரம் மட்டுமே இருக்கும்.
மற்ற வகை விஷன் ப்ரோ ஹெட்செட்டுகள் பயன்படுத்தும்போது, அதை அணிந்திருப்பவர் தனது சுற்றுப்புறத்தைப் பார்க்க முடியாது. ஆனால் இந்த வகை ஹெட்செட்டுகள் உயர் தெளிவுத்திறன் கொண்ட டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. மேலும் நம்மை சுற்றி உள்ளவற்றை முழு வண்ணத்தில் காண்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது சிறந்த வீடியோ மற்றும் ஆடியோக்களை வழங்குகிறது. இந்த ஹெட்செட் மூலம் உங்கள் iOS செயலிகளை பார்க்கவும் பயன்படுத்தவும் முடியும். கேம் விளையாடலாம், ஸ்ட்ரீமிங் அமைப்பை பனோரமிக் செட்-அப்பில் பார்க்கவும் முடியும்.
இந்த புதிய விஷன் ப்ரோ ஹெட்செட்டை வருடாந்திர உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் ஐபோன் நிறுவனம் வெளியிட்டது. இந்த விஷன் புரோ ஹெட்செட் இந்திய மதிப்பில் 2,90,000 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்செட் அடுத்தாண்டு தொடக்கத்தில் அமெரிக்காவிலும், பின்னர் படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் விற்பனைக்கு வருகிறது.







