முக்கியச் செய்திகள் குற்றம்

கொரோனா வீதிகளை மீறி செயல்பட்ட மதுகூடத்திற்கு சீல் வைத்த போலீசார்!

ஆத்தூர் அருகே விநாயகபுரத்தில் கொரோனா விதிகளை மீறி செயல்பட்ட மதுக்கூடத்திற்கு போலீசார் சீல் வைத்தனர்.

கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்து வருவதையொட்டி தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், அனைத்து மதுக்கூடங்கள் உள்ளிட்டவற்றிற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனிடையே சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரத்தில் அமைந்துள்ள மதுக்கூடத்தில் அரசு விதித்துள்ள கொரோனா விதிகளை மீறி மதுக்கூடம் செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சமந்தப்பட்ட மதுக்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு விதிகளை மீறி மதுக்கூடம் செயல்பட்டதோடு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

மதுபானக் கூடத்தின் உரிமையாளர்

இதனையடுத்து ஆம்னி காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 600 பீர் பாட்டில்கள் மற்றும் ஆம்னி காரையும் பறிமுதல் செய்த போலீசார் அரசு விதியை மீறி மதுக்கூடத்தை நடத்திய உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கிருந்த மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement:
SHARE

Related posts

முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!

3 பேரை கொன்ற யானை பிடிக்கப்பட்டது!

Jeba Arul Robinson

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி வெளியீடு!

Jeba Arul Robinson