முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மேற்கு மண்டலத்தை திமுக கோட்டையாக மாற்றுவது நிச்சயம்: மகேந்திரன் உறுதி

மேற்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவது உறுதி என அக்கட்சியில் நேற்று இணைந்த மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன், தேர்தலுக்குப் பிறகு அந்தக் கட்சியில் இருந்து விலகினார். அப்போது கமல்ஹாசன் மீது சரமாரி புகார் களைத் தெரிவித்தார். பின்னர் அவர் திமுகவில் இணையப்போவதாகக் கூறப் பட்டது. இதை அவரே அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

இதையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்திய மகேந்திரன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர்,  மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாகப் பார்க்கப்படலாம், ஆனால் எதிர்காலத்தில் அப்படி இருக்காது என்றவர், மேற்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவது நிச்சயம், அதுவே தன் நோக்கம் என்றார். தனக்கு பொறுப்பு வேண்டாம் என்றும் அது முக்கியம் இல்லை என்றும் கூறிய அவர், திமுக தலைவர் பெருந்தன்மையாக பொறுப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் கட்சிக்காக வேலை செய்வேன் என்றும் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

அண்ணா, மு.கருணாநிதி நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை!

Jeba Arul Robinson

உள்ளாட்சித் தேர்தலின் போது கூடுதல் பாதுகாப்பு: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

Ezhilarasan

நாடி நரம்பு முறுக்க முறுக்க…. அண்ணாத்த மோஷன் போஸ்டர்

Halley karthi